Categories
கிரிக்கெட் விளையாட்டு

தென் ஆப்பிரிக்கா உடனான மூன்றாவது டெஸ்ட் – இந்தியா பேட்டிங்….!!

இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க அணி தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலுமே இந்திய அணி வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் இன்று தொடங்குகிறது.

இந்த டெஸ்ட் போட்டியில் தற்போது டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது. இப்போட்டியில் அறிமுக வீரரான இடக்கை சுழற்பந்துவீச்சாளர் ஷபாஷ் நதீம் இந்திய அணி சார்பாக தனது முதல் சர்வதேச டெஸ்ட் போட்டியில் பங்கேற்கின்றார். அதேபோல் தென் ஆப்பிரிக்க அணிக்காகவும் அறிமுக வீரரான ஜார்ஜ் லிண்டே தனது முதல் சர்வதேச டெஸ்டில் களமிறங்குகிறார்.

மூன்றாவது டெஸ்ட் அணி விபரம்:

இந்தியா: மாயங்க் அகர்வால், ரோஹித் சர்மா, சேடேஷ்வர் புஜாரா, விராட் கோலி (கே), அஜிங்க்யா ரஹானே, ரவீந்திர ஜடேஜா, விருத்திமான் சஹா, ரவிச்சந்திரன் அஸ்வின், ஷாபாஷ் நதீம், உமேஷ் யாதவ், முகமது ஷமி.

தென் ஆப்பிரிக்கா: டீன் எல்கர், குயின்டன் டி கோக், ஜுபைர் ஹம்ஸா, ஃபாஃப் டு பிளெசிஸ் (கே), டெம்பா பவுமா, ஹென்ரிச் கிளாசென், ஜார்ஜ் லிண்டே, டேன் பீட், காகிசோ ரபாடா, அன்ரிச் நோர்ட்ஜே, லுங்கி இங்கிடி.

இதற்கு முன் நடைபெற்ற இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து இரண்டிலும் வெற்றிபெற்றது. அதேபோல் இத்தொடரின் மூன்றாவது டெஸ்டிலும் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளதால் கடைசி டெஸ்டிலும் இந்தியா வெற்றி பெறுமா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Categories

Tech |