Categories
சினிமா தமிழ் சினிமா

திரிஷ்யம்-2 இந்தி ரீமேக்….. இணைந்த பிரபல நடிகை…. உற்சாகத்தில் ரசிகர்கள்….!!!

மலையாளத்தில் கடந்த 2013-ம் ஆண்டு வெளியான ‘த்ரிஷ்யம்’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் மோகன்லால்,மீனா ஆகியோர் நடித்திருந்தனர். ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை இப்படம் தமிழ்,தெலுங்கு, கன்னடம், இந்தி என பலமொழிகளிலும் வெளியாகி வெற்றிப்பெற்றது. இதனையடுத்து இரண்டாம் பாகமும் வெளியாகி வெற்றியை பெற்றது. இந்தப் படத்தின் ரீமேக் பழமொழிகளில் உருவாகி உள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் இந்தி ரீமேக்கின் முதல் பாகத்தில் நடித்த அஜய் தேவ்கானே தற்போது இரண்டாம் பாகத்திலும் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக ஸ்ரேயா நடித்துள்ளார். மேலும் பெண் போலீஸ் வேடத்தில் தபு நடித்து உள்ளார். தற்போது திரிஷ்யம்-2 ஹிந்தி ரீமேக் படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து இருக்கிறார். இப்படம் நவம்பர் 18 திரையைக்கு வருகிறது. மேலும் இந்த டிரைலரில் இடம் பெற்றுள்ள தேவி ஸ்ரீ பிரசாத்தின் பின்னணி இசை பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது.

Categories

Tech |