13-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த 90 பைசா வெள்ளி ஸ்பூன் ஒன்று தற்போது சுமார் 2 லட்சத்திற்கு ஏலம் போனது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தில் கார் புட் விற்பனை செய்த நபர் ஒருவர் மெல்லிய, ஒரு பழைய நசுங்கிய, நீண்ட கைப்பிடி கொண்ட 90 பைசா வெள்ளி கரண்டியை வாங்கி அதனை ரூ. 2 லட்சத்திற்கு ஆன்லைன் ஏலத்தில் விற்பனை செய்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் 5 அங்குலம் கொண்ட அந்த கரண்டியை லாரன்ஸ் ஏலதாரர்களின் வெள்ளி நிபுணர் அலெக்ஸ் புட்சர் பரிசோதித்து பார்த்துள்ளார்.
அப்போது அந்த கரண்டி பதிமூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்பதும், அதன் தொன்மை மதிப்பு ரூ.51,712 என்பதையும் நிர்ணயம் செய்துள்ளார். அதன் பிறகு ஏலத்தொகை ஆன்லைன் ஏலத்தில் படிப்படியாக அதிகரிக்க தொடங்கி இறுதியாக ரூ.1,97,000-க்கு அந்த ஸ்பூன் விற்பனை செய்யப்பட்டது. மேலும் கூடுதல் கட்டணங்கள் மற்றும் வரிகள் உட்பட ரூ. 2 லட்சத்தை தாண்டியது அந்த பழங்கால வெள்ளி கரண்டியின் மதிப்பு.