திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதாரபாதி முன் மண்டப நுழைவு வாயில் பகுதியில் கல் நிலை அமைக்கும் பணி தொடங்கியது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் கடற்கரையில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதாரபதி முன் மண்டப நுழைவு வாயிலில் 12 அடி உயரம், 8 அடி அகலத்தில் கல்நிலை அமைக்கப்படுகிறது. இதன் தொடக்க விழா இன்று நடந்தது. அய்யாவழி அகில திருக்குடும்ப மக்கள் சபை தலைவர் வள்ளியூர் எஸ். தர்மர் தலைமை தாங்கி கல்லை நடும் பணிகளை தொடங்கி வைத்தார்.
இதில் பொதுச் செயலாளர் பொன்னுத்துரை, இணை தலைவர்கள் பால்சாமி, பேராசிரியர் விஜயகுமார், ராஜதுரை, ஐயாப்பழம், துணைச் செயலாளர் ராஜேந்திரன், இணைச் செயலாளர்கள் செல்வின், தங்கம், வரதராஜபெருமாள், ராதாகிருஷ்ணன், ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். நிர்வாக குழு உறுப்பினர்கள் ராமமூர்த்தி, இளங்கோ, சட்ட ஆலோசகர் வக்கீல் சந்திரசேகரன் மற்றும் பேராசிரியர் சங்கரன், ஸ்ரீமதி, கணேசன், ராஜ்குமார், கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.