Categories
அரசியல் மாநில செய்திகள்

திருச்செந்தூரில் பூரண கும்ப மரியாதையுடன்… முதல்வருக்கு வரவேற்பு..!!

தேர்தல் பரப்புரைக்காக திருச்செந்தூர் வந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு திருச்செந்தூரில் பூரண கும்ப மரியாதை வரவேற்பு அளிக்கப்பட்டது.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகம் முழுவதும் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். தொடர்ந்து 6-ம் கட்ட பரப்புரையாக இன்று தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் திருச்செந்தூரில் மகளிர் குழுக்களுடன் தேர்தல் கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு வந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு திருச்செந்தூர் பகத்சிங் பேருந்துநிலையம் முன்பு முன்னாள் சட்டமன்ற தொகுதி செயலாளர் வடமலைப்பாண்டியன் தலைமையில் பூரண கும்பத்துடன் மரியாதை செய்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் பிரசாதங்கள் முதல்வர்க்கு வழங்கப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு முதல்வரை வரவேற்றனர்.

Categories

Tech |