Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

அரசு பேருந்து -பைக் மோதல்… தூக்கி வீசப்பட்ட இருவர்… நேர்ந்த சோக முடிவு…!!

 அரசு பேருந்து மோதியதில் இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

திருச்சி மாவட்டம் தில்லை நகர் காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் கணபதி. இவர் திருச்சியில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனம் ஒன்றில் சிவில் இன்ஜினியராக பணியாற்றி வருக்கிறார்.  நேற்று முன்தினம் வேலை முடிந்துஅவரும் அவரது உதவியாளர் ஞானஜோதி என்பவரும் மோட்டார் சைக்கிளில் டிவிஎஸ் டோல்கேட் இல் இருந்து தலைமை தபால் நிலையம் அருகே வந்து கொண்டிருந்தனர்.

திருச்சி தலைமை தபால் நிலையம் அருகே வந்த போது மத்திய பஸ் நிலையத்தில் இருந்து வந்த அரசு பஸ் ஒன்று கணபதி ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளின் மீது மோதியது. இதில் இருவரும் சாலையில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். அவர்களில்கணபதி என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து தகவல் அறிந்த  போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய ஞானஜோதி மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இறந்து  கிடந்த கணபதி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன்அரசு  பேருந்து  ஓட்டுனர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அரசு மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்ட ஞானஜோதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார் .

Categories

Tech |