Categories
தேசிய செய்திகள்

திருடச்சென்ற இடத்தில் மாரடைப்பு… பணத்தைப் பார்த்த சந்தோஷம்…பிறகு நடந்த பரிதாபம் …!!!

பொது சேவை மையத்தில் கொள்ளையடித்த திருடனுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது .

உத்தரபிரதேசம் பிஜ்னோர் மாவட்டம் கோத்வாலி தேஹாத் கிராமத்தில் உள்ள பொது சேவை மையத்தில் கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி 7 லட்சம் ரூபாய் திருட்டு போனதாக அந்த பொது சேவை மையத்தின் உரிமையாளர் நவாப் ஹைதர்  அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் நுஷாத் என்ற நபரை  சந்தேகத்தின் பெயரில் கைது செய்து விசாரணை நடத்தியுள்ளார் .

அப்போது அவனும் அஜாஜ்  என்ற நபரும் சேர்ந்து சேவை மையத்தில் 1000, 2000 ரூபாய் கிடைக்கும் என்று நினைத்து திருடச் சென்றதாகவும் ஆனால் அங்கு 7 லட்சம் ரூபாய் இருந்ததை பார்த்து இருவரும் மகிழ்ச்சியில் திக்கு முக்காடி நின்ற நிலையில் திடீரென அஜாஜ்க்கு மாரடைப்பு ஏற்பட்டது. ஆகையால் திருடிய பணத்தில் பாதியை அறுவைசிகிச்சைக்கு பயன்படுத்தியதாகவும் மீதி பணத்தை டெல்லியில் சூதாட்டத்திற்கு பயன்படுத்தியதாகவும் போலீஸ் விசாரணையில் கூறியுள்ளார்.

மேலும் இந்த இரண்டு திருடர்களின் மீது பல வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் போலீசுக்கு தெரியவந்தது. தற்போது அவர்கள் வசமாக சிக்கியுள்ளனர். இதனைத்தொடர்ந்து நுஷாத்திடம் இருந்து 3.5 லட்சம் ரூபாய் பணமும் 2 துப்பாக்கிகளும் அவர்கள் பயன்படுத்திய பைக்கும் போலிஸாரால் கைப்பற்றப்பட்டது.

இவர்களுக்கு தக்க தண்டனை அளிக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளார். அதன் பிறகு இந்த வழக்கை மிக குறுகிய காலத்தில் கண்டறிதற்காக  அம்மாநிலத்தின் காவல்துறை சார்பில் இரண்டு குற்றவாளிகளையும் கண்டுபிடித்த போலீசாருக்கு 5000 ரூபாய் பரிசு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

.

Categories

Tech |