அஸ்ஸாம் மொழியில் திருக்குறளை மொழிபெயர்க்கப்படும் என பேரவையில் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கி மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. விவாதங்களின் முடிவில் ஒவ்வொரு நாளும் விதி 110இன் கீழ் பல்வேறு அறிவிப்புகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து வருகிறார். அதன்படி, இன்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் சில புதிய அறிவிப்புகளை முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ளார். அதில்,
ரேஷன் கடை ஊழியர்களின் குடும்பநல நிதி 2 லட்சத்திலிருந்து 3 லட்சமாக உயர்த்தப்படும். ரேஷன் கடை ஊழியர்களுக்கு இனிமேல் ஊதியம் வங்கி பரிவர்த்தனை மூலம் வழங்கப்படும் கூட்டுறவுத் துறையில் மாற்றுத்திறனாளிகளுக்கான படி 1000ஆக இருந்த நிலையில் 2,500 ஆக அதிகரிக்கப்படும். அஸ்ஸாம் மொழியில் இந்த ஆண்டு திருக்குறள் மொழிபெயர்க்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.