Categories
சினிமா தமிழ் சினிமா

“திருக்குறளில் ஆன்மீகம் எங்கு உள்ளது?”…. கேள்வி எழுப்பிய கவிஞர் வைரமுத்து….!!!

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை உலக அமைதிக்கும் மனித வாழ்வு வழிகாட்டும் திருக்குறள் என்ற மாநாட்டை ஆளுநர் ரவி தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், திருக்குறள் மொழிபெயர்ப்பட்ட போது, அதிலிருந்து ஆன்மீக கருத்துக்களை ஜி.யு.போப் மறைத்து விட்டார். அரசியல் காரணத்திற்காக திருக்குறளில் உள்ள ஆன்மீக கருத்துக்கள் மறைக்கப்படுவது சரியானது இல்லை என்று கூறியிருந்தார். ஆளுநரின் பேச்சு சர்ச்சையை கிளப்பி உள்ளது.

ஆளுநரின் கருத்துக்கு பல்வேறு தரப்பினரும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். இது குறித்து வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பி உள்ளார். அதில், தர்மார்த்த காமோட்சம் என்பது வடமொழி நிரல்நிரை. மோட்ச்ம் ஆன்மீக கற்பனை என்றுதான் வள்ளுவர் அறம் பொருள் இன்பத்தோடு நிறுத்தினார். ஆன்மீகம் அதில் எது? வள்ளுவம் வாழ்வியல் அது காற்றைப்போல் பொதுவானது. காற்றுக்கு யார் சாயமடைப்பது என்று பதிவிட்டு இருந்தார்.

Categories

Tech |