Categories
உலக செய்திகள்

வழுக்கி விழுந்த மணப்பெண்…. கை உடைந்த சோகம்…. நஷ்டஈடு கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு….!!

பிரித்தானியாவில் மணப்பெண் ஒருவர் திருமண அரங்க நிறுவனத்தின் மீது வழக்கு பதிவு செய்துள்ளார்.

பிரித்தானியாவில் 2018 ஆம் ஆண்டு கேரா டோனவன் என்ற மணப்பெண் அதிநவீன பளபளக்கும் தளத்தில் ஆடும்பொழுது கால் வழுக்கி அவருக்கு மூட்டு பகுதி முறிந்துள்ளது. இதனால் அந்த திருமண அரங்கத்தின் நிறுவனம் மீது 1,50,000 பவுண்டுகள் நஷ்டஈடு கேட்டு வழக்கு பதிவு செய்துள்ளார். குறிப்பாக LED விளக்குகள் ஒளிரும் லேமினேட் செய்யப்பட்ட பிளாஸ்டிக்கினால் தளமானது அமைக்கப்பட்டுள்ளது. அந்த திருமண அரங்கின் ஊழியரான லீஸ்பிரையாரி தளத்தில் மது அருந்தக் கூடாது என்று கூறவில்லை.

மேலும் மது அருந்தும் பொழுது அதனை தடுக்கவும் இல்லை என்று புகார் தெரிவித்துள்ளார். இதனையடுத்து தளத்தில் உறவினர்கள் மதுவினை சிந்தியுள்ளனர். அதனையும் அங்குள்ள ஊழியர்கள் துடைக்காமல் இருந்துள்ளனர்.  இது தெரியாமல் கேரா டோனவன் தளத்தில் நடமானடியுள்ளார். அப்பொழுது சிந்தியுள்ள மதுவில் கால் வைத்து வழுக்கி விழுந்துள்ளார். இதனால் அவரின் கை மற்றும் முட்டி முறிந்துள்ளது. இந்த சம்பவத்திற்கு பிறகு கேரா டோனவனுக்கு மூன்று தடவை அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன.

இருப்பினும் அவர் வலியால் அவதிப்படுவதாக கூறியுள்ளார். முக்கியமாக தனது சிறப்பு தேவை ஆசிரியர் பணிக்கு செல்ல முடியாமல் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். குறிப்பாக 16ஆம் நூற்றாண்டில் இருந்து டியூடர் மேனர் ஹவுஸை நடத்தி வரும் கன்ட்ரி ஹவுஸ் வெட்டிங்ஸ் லிமிடெட்டுக்கு எதிராக வழக்கு தொடுத்துள்ளார். ஆனால் இன்னும் அவரின் வழக்கை நீதிபதி விசாரிக்காமல் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |