Categories
உலக செய்திகள்

“திருமண நிகழ்ச்சிக்கு சென்ற வாலிபர்”…. தலிபான்களின் வெறிச்செயல்…. பெரும் அதிர்ச்சி….!!!

ஆப்கானிஸ்தானில் திருமண நிகழ்ச்சிக்கு சென்ற வாலிபர் ஒருவர் தலிபான்கள் சுட்டதில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தான் நாட்டின் காபூல் நகரில் ஒரு திருமண நிகழ்ச்சிக்கு தனது உறவினருடன் பைசல்  என்ற வாலிபர் சென்றுள்ளார். இதனையடுத்து அவர்கள் 2 பேரும் வீடு திரும்பிக் கொண்டு இருந்துள்ளனர். இந்நிலையில் சோதனைசாவடி ஒன்றில் தலிபான்கள் அவர்களை வழிமறித்து  சோதனை மேற்கொண்டனர்.

அதன்பின் அவர்களை செல்லும்படி கூறி உள்ளனர். இந்நிலையில் தலிபான்கள் அவர்கள் 2 பேரையும் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் வாலிபர் பைசல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் 2 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |