திருமண நிகழ்ச்சியில் பாடல் ஒலிபரப்பியதால் ஏற்பட்ட தகராறில் 7 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள அடிக்காமலை பகுதியில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. அந்த நிகழ்ச்சியில் ஒலி பெருக்கி மூலம் பாடல் ஒலி பரப்பப்பட்டது. இந்நிலையில் அடிக்காமலைப்பகுதியில் வசிக்கும் ராமலிங்கம் என்பவர் பாடல் சத்தம் அதிகமாக இருக்கிறது சற்று குறைத்து வையுங்கள் என கூறியுள்ளார். இதனால் அதே பகுதியில் வசிக்கும் வீரபாண்டியன் என்பவருக்கும் கண்ணனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து வீரபாண்டியனின் மகன் இளங்கண்ணன், மகள் இளங்கவி ஆகியோர் ராமலிங்கத்தை தகாத வார்த்தைகளால் திட்டி, அருகிலிருந்த கட்டையால் அடித்துள்ளனர். இதனால் ராமலிங்கம் பலத்த காயம் அடைந்தார். இதுகுறித்து ராமலிங்கம் தா.பழூர் காவல் நிலையத்தில் தனது மனைவி அஞ்சுகத்தை தாக்கியும். கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் பேரில் வீரபாண்டியன் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனையடுத்து வீரபாண்டியன் மற்றும் அவருடைய மகன் இளங்கண்ணன் ஆகியோரை ராமலிங்கத்தின் மகன்கள் அபினேஷ், ஆனந்த், கோவிந்தன் என்பவரின் மகன் வினோத்குமார் மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோர் திருமண நிகழ்ச்சியில் மாற்றுமத பாடலை ஒலிபரப்பியதற்காக அவர்களை தகாத வார்த்தைகளால் திட்டி, தாக்கியும், அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து பலத்த காயமடைந்த வீரபாண்டியனை ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் இளங்கண்ணன் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் அபினேஷ் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.