Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தங்க நகை பறித்த வழக்கில்…. வசமாக சிக்கிய குற்றவாளிகள்…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!

திருமண தரகரிடம் தங்க நகை பறித்த வழக்கில் தலைமறைவாக இருந்த 3 குற்றவாளிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பணகுடி பகுதியில் கந்தசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் திருமண தரகர் ஆவார். கடந்த 21-1-2021 அன்று கந்தசாமியை 3 பேர் சந்தித்து காவல்கிணறு பகுதியில் உள்ள ஒரு நபருக்கு பெண் பார்க்க வேண்டும் என்று கூறி காரில் நாகர்கோவிலுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அதன்பின் திரும்பி வரும் வழியில் அவர்கள் 3 பேரும் கந்தசாமியின் கழுத்தை நெறித்து அவர் அணிந்திருந்த 23 பவுன் தங்க நகைகளை பறித்தனர். அதன்பின் காவல்கிணறு ரயில்வே மேம்பாலம் அருகில் கந்தசாமியை காரிலிருந்து தள்ளிவிட்டு மூவரும் தப்பி சென்றுள்ளனர்.

இதுகுறித்து கந்தசாமி பணகுடி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையில் நகையை பறித்த நபர்கள் சென்னைக்கு சென்றது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் கோயம்பேடு அருகே தலைமறைவாக இருந்த எல்கான்தாசன், ஸ்டாலின் மற்றும் சபரி வளவன் ஆகிய 3 பேரையும் கைது செய்ததோடு அவர்களிடம் இருந்த 18 பவுன் தங்க நகைகள் மற்றும் காரை பறிமுதல் செய்தனர். இதனைத் தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் இந்த வழக்கில் திறமையாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த இன்ஸ்பெக்டர் சகாய சாந்தி மற்றும் காவல்துறையினரை பாராட்டினார்.

Categories

Tech |