கோவையில் நடைபெற்ற திருமண விழாவில் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக மணமக்களுடன் உறவினர்கள் பதாகைகளை ஏந்திய படி எடுத்துகொண்ட புகைப்படம் வைரலாகி வருகின்றது.
புளியமுத்தூரில் இஸ்லாமியர் வீட்டு திருமண வரவேற்பு விழாவில் மணமக்கள் முகம்மதுகனி மற்றும் அபிரினா அவர்களின் குடியுரிமை கருத்து சட்டத்திற்கு எதிராக கருத்து தெரிவித்து பதாகைகளை ஏந்தி தங்களுடைய எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.
அதேபோல தேசிய மக்கள் பதிவுவேடு சட்டங்களும் எதிர்ப்பு தெரிவிக்கும் பதாகைகளை ஏந்தி அவர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
கேரளாவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்ப்பு தெரிவித்து புதுமணத்தம்பதிகள் பேரணியில் ஈடுபட்டனர்.
தற்போது திருமண வரவேற்பு விழாவில் மணமக்கள் உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்து பதாகைகளை ஏந்திய புகைப்படம் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகிஇருக்கிறது.