திருமணமான 21 நாட்களில் மனைவி தற்கொலை செய்து கொண்ட சோகம் தாங்க முடியாமல் கணவனும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சென்னை பல்லாவரத்தை சேர்ந்த பிரவீன்குமார் என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த தீபிகா என்பவரை காதலித்து பெற்றோர் விருப்பமில்லாமல் கடந்த மே மாதம் திருமணம் செய்து கொண்டரர். ஆடி மாதம் என்பதால் கடந்த 20ஆம் தேதியன்று தீபிகாவை அவரது தாயார் வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டார். 10 நாட்களாக தாயின் வீட்டில் இருந்த நிலையில் தீபிகா கடந்த 30ஆம் தேதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டரர்.
குறித்து கோட்டாட்சியர் விசாரணை செய்து வந்த நிலையில் உயிரிழந்த பெண்ணின் கணவன் பிரவீன்குமாரும் நேற்று உறவினர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இருவரது தற்கொலைக்கான காரணம் இது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.