தயாரிப்பாளர் ரவீந்தரும், சீரியல் நடிகை மஹாலக்ஷ்மியும் திருமணம் செய்துகொண்டது சென்ற சில வாரங்களுக்கு முன் பெரியளவில் பரபரப்பாக பேசப்பட்டது. அதாவது பணத்திற்காகதான் மஹாலக்ஷ்மி திருமணம் செய்து கொண்டதாக ட்ரோல்களும் வந்தது. அவற்றிற்கெல்லாம் அவர்கள் பதிலடி கொடுத்தனர். இதையடுத்து புது தம்பதியினர் சொந்தஊர் குலதெய்வ கோவிலுக்கு சென்று தற்போது திரும்பி இருக்கின்றனர். அதுமட்டுமின்றி அவர்கள் விஜய் டிவியின் ஸ்பெஷல் ஷோ ஒன்றிலும் ஜோடியாக கலந்துகொண்டிருக்கின்றனர்.
அதன் ப்ரோமோ இப்போது வெளியாகி வைரலாகி இருக்கிறது. இந்த நிலையில் தற்போது திருமணமாகி ஒரு மாதம் நிறைவடைந்து இருப்பதை ரவீந்தர் கொண்டாடி இருக்கிறார். “People smile at us for 100 reason… My happiness have one Reason. its ” U” LOVE YOU ” MUYALU” என அவர் குறிப்பிட்டு ஜோடியாக போட்டோவையும் வெளியிட்டுள்ளார். மஹாலக்ஷ்மிக்கு அவர் முயல் என்று பெயர் வைத்து இருப்பதையும் அந்த பதிவில் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.