திருமணமான 7 மாதத்தில் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டத்திலுள்ள தியானபுரம் சாப்பாவூர் பகுதியில் பிரபாகரன் என்பவர் வசித்து வருகின்றார். இவர் டிரம்ஸ் இசை கலைஞராக இருக்கின்றார். இவருக்கும் அழகிரி காலனி பகுதியை சேர்ந்த நாகராஜன் மகள் திவ்யாவுக்கு கடந்த 7 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கணவன்- மனைவி இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு காரணமாக திவ்யா தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் பிரபாகரனின் அண்ணன் கடந்த சில தினங்களுக்கு முன்பு இறந்துவிட்டதால் துக்க நிகழ்ச்சிக்கு திவ்யா மற்றும் அவரது குடும்பத்தினர் வந்துள்ளனர். அப்போது திவ்யாவின் குடும்பத்தினர் சமரசம் செய்து கணவன்-மனைவி இருவரையும் சேர்த்து வைத்தனர். இந்நிலையில் திடீரென வீட்டில் திவ்யா தூக்கிட்டு தற்கொலை செய்ததாக அவரின் கணவர் நாகராஜனுக்கு தகவல் கொடுத்துள்ளார்.
இதனால் திவ்யாவின் பெற்றோர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தபோது தூக்கில் கிடந்ததை கண்டு அதிர்ச்சிடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த தாலுகா காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று திவ்வியாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து நாகராஜன் தாலுகா காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின தனது மகளிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதால் இறந்து இருக்கலாம் என்றும் தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அதன்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு திருமணம் முடிந்த 7 மாதங்களில் திவ்யா வரதட்சனை கொடுமையால் இறந்தாரா என்பது குறித்து உதவி கலெக்டர் கீதா தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.