திருமணமான 3 மாதத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மேலநம்பிபுரம் பகுதியில் குமார் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு லேப் டெக்னீசியன் படித்து முடித்த அமுதா என்ற மகள் இருந்துள்ளார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அமுதாவிற்கும் சிந்தலக்கரை பகுதியில் வசிக்கும் சுரேஷ் மாதவன் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. அங்கு சுரேஷ் மாதவன் மற்றும் அமுதா இரண்டு பேரும் சந்தோஷமாக வாழ்க்கை நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் அமுதா வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனையடுத்து வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பிய சுரேஷ் மாதவன் தனது மனைவியான அமுதா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அலறி சத்தம் போட்டுள்ளார். அந்த அலறல் சத்தத்தை கேட்டு அருகில் இருந்தவர்கள் விரைந்து சென்று பார்த்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்தத் தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அமுதாவின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் திருமணமான 3 மாதத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட விபரம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.