Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

திருமணமான பெண்ணுடன் தனித்தனியே தொடர்பு… நெருங்கிய நண்பருக்கு நடந்த கொடூரம்… தென்காசியில் பரபரப்பு…!!

முன்விரோதம் காரணமாக வாலிபரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டத்திலுள்ள கம்பிளி பகுதியில் வேல்சாமி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு புரோட்டா மாஸ்டரான 23 வயதுடைய மகாதேவன் என்ற மகன் இருந்துள்ளார். இவரும் அதே பகுதியில் வசிக்கும் கட்டிட தொழிலாளியான மகாதேவன் என்பவரும் நெருங்கிய நண்பர் ஆவர். இவர்கள் இருவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் திருமணமான ஒரு பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறி விட்டது. இதனால் நண்பர்களான இரண்டு பேரும் அந்த பெண்ணிடம் தனித்தனியே சென்று உல்லாசமாக இருந்து வந்ததால் இருவருக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் புரோட்டா மாஸ்டரானா மகாதேவன் மட்டும் தனியாக உறங்கிக் கொண்டிருந்த போது கட்டிட தொழிலாளியான மகாதேவன் அவரது வீட்டிற்குள் சென்றார். இதனையடுத்து  தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து கட்டிட தொழிலாளி அவரை சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார். இதில் புரோட்டா மாஸ்டரான மகாதேவன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனையடுத்து வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பிய மகாதேவனின் பெற்றோர் அவர் ரத்தவெள்ளத்தில் உயிர் இழந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து அலறி சத்தம் போட்டுள்ளனர்.

அந்த அலறல் சத்தத்தை கேட்டு அருகில் இருந்தவர்கள் விரைந்து சென்று பார்த்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்தத் தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் மகாதேவனின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மகாதேவனை அரிவாளால் வெட்டி கொலை செய்த கட்டிட தொழிலாளியான மகாதேவனை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |