விஜே பாவனா தனது சமூக வலைதளப் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார் .
சினிமாவில் வரும் நடிகைகள் மட்டுமல்ல சின்னத்திரை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் தொகுப்பாளினிகளும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து விடுகின்றனர். அந்த வகையில் பிரபல தொகுப்பாளினி பாவனா விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் உட்பட ஏராளமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்களை கவர்ந்தார். தற்போது இவர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் பணியாற்றி வருகிறார் . இந்நிலையில் பாவனா தனது சமூக வலைதளப் பக்கத்தில் ரசிகர்களுடன் உரையாடியுள்ளார்.
அதில் ஒரு ரசிகர் உங்களுக்கு திருமணமாகி எத்தனை வருடங்கள் ஆகிறது? என்று கேட்க ‘பத்து வருடங்கள் ஆகிவிட்டது’ என பாவனா பதிலளித்துள்ளார் . இதைத் தொடர்ந்து மற்றொரு ரசிகருக்கு உங்களுக்கு குழந்தை இருக்கிறதா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு பதிலளித்த பாவனா ‘எனக்கு குழந்தை இல்லை, ஒரு தம்பி மட்டுமே இருக்கிறான்’ என கூறி தனது செல்ல நாய் குட்டியுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளார்.