டிரைவர் மீது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள வடபழனி குமரன்நகர் முதல் வீதியில் விக்ரமன்-சாந்தி என்ற தம்பதியினர் வசித்துவந்தனர். இதில் விக்ரமன் ஜே.சி.பி. டிரைவராக இருந்தார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் விக்ரமனுக்கு திருமணநாள் வந்ததால் மனைவி, குழந்தைகளுடன் அதை கொண்டாட அவர் வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டிற்கு முன்பக்கம் உள்ள ஆட்டுக்கொட்டகைக்கு மின் இணைப்பு கொடுப்பதற்காக விக்ரமன் ஒயரை இழுத்துள்ளார்.
அப்போது எதிர்பாராதவிதமாக விக்ரமன் மீது மின்சாரம் பாய்ந்து அவர் தூக்கி வீசப்பட்டார். இதனால் விக்ரமனின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அதன்பின் விக்ரமின் மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு விக்ரமனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.