Categories
இந்திய சினிமா சினிமா

திருமணத்தை எட்டும் 7 வருட காதல்….. திருமண தேதியை அறிவித்த மலையாள நடிகை….!!

மம்முட்டியின் படத்தில் இணைந்து நடித்த கதாநாயகி பிராச்சி தனது காதலனுடன் திருமணம் நடக்க இருக்கும் தகவலை வெளியிட்டுள்ளார்.

மலையாளத்தில் மம்முட்டியின் மாமாங்கம் படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் நடிகை பிராச்சி தெஹ்லான். தமிழிலும் இப்படம் டப்பிங் செய்து வெளியிடப்பட்டது. டெல்லியை சேர்ந்த இவர் கைப்பந்து வீராங்கனை யாகவும் திகழ்கிறார். அளவிலான போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களையும் வென்றுள்ளார். பிராச்சிக்கு திருமணம் முடிவாகியுள்ளது. ரோகித் சஹோரா என்ற தொழிலதிபரை மணக்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில்” நானும் ரோஹித்தும் ஏழு வருடங்களாக காதலித்து வருகிறோம். எனது உறவினர் திருமணத்தில் தான் அவரை சந்தித்தேன்.

மறுநாளே காதலிப்பதாக கூறி திருமணம் செய்து கொள்ளலாமா என்று கேட்டார். எனக்கும் அவரை பிடித்திருந்தது. அதன்பின் காதலிக்கத் தொடங்கினோம். எங்களது திருமணம் வருகின்ற ஏழாம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது. ஊரடங்கினால் 50 பேரை மட்டுமே திருமணத்திற்குஅழைத்துளோம். திருமணத்திற்கு வருபவர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளோம்” என தெரிவித்தார்.

Categories

Tech |