மதுரையில் ஜாதியின் பெயரை கூறி கழிப்பிடத்திற்கு செல்லும் பெண்களை வீடியோ எடுத்து மிரட்டும் அவலம் நிகழ்ந்துள்ளது.
மதுரை திருமங்கலம் தொகுதிக்குட்பட்ட பேரையூர் அருகே சாதியை காரணம் காட்டி திறந்தவெளி கழிப்பிடத்திற்கு செல்லும் பெண்களை வீடியோ எடுத்து மிரட்டுவதாக புகார் எழுந்துள்ளது. தூர் சாணார்பட்டி கிராமத்தில் போதிய கழிப்பறை வசதிகள் இல்லாத நிலையில் அரசு புறம்போக்கு இடத்தை மறைவிடத்திற்கு செல்லக்கூடிய திறந்தவெளி கழிப்பறையாக பயன்படுத்தி வந்துள்ளனர்.