தமிழ் சினிமாவில் நெஞ்சிருக்கும் வரை, உன்னை போல் ஒருவன், பயணம், வெடி, என் வழி தனி வழி ஆகிய படங்களில் பூனம் கவுர் நடித்து ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்துள்ளார். இவர் தெலுங்கிலும் அதிக படங்களில் நடித்து வருகிறார். இவர் திருமணம் ஆகாத பெண்களுக்கு கரு கலைப்பு செய்யலாம் என்று சுப்ரீம் கோட் அளித்த தீர்ப்பை வரவேற்று இருக்கிறார். இது குறித்து பூனம் கவுர் கூறியது, சட்டப்படியான பாதுகாப்பான கருகலைப்புக்கு திருமணமாகாத பெண்கள் கூட தகுதியானவர்கள் தான்.
அதனை போல திருமணமாகாத பெண்களுக்கும் கணவரை பிரிந்து வாழும் பெண்களுக்கும் கருக்கலைப்பு செய்வது கொள்ளும் உரிமை இருக்கிறது. பெண்கள் கருத்தரித்த பிறகு ஆண்களுக்கு கட்டுப்பட்டு இருக்க வேண்டும் என பலவந்தப்படுத்துவத்தை நான் நிறைய இடங்களில் பார்த்தேன். இந்நிலையில் கருகலைப்பு சம்பந்தமாக சுப்ரீம் கோர்ட் அளித்துள்ள தீர்ப்பை ஆதரிக்கிறேன். பொருளாதார ரீதியாக தன்னை காத்துக் கொள்ளவும், திருமண உறவை காப்பாற்றிக் கொள்ளவும் பெண்களுக்கு கருத்தரிப்பதை நான் பார்த்திருக்கிறேன்.