உள்ளாட்சி அமைப்புகளின் துணைத்தலைவர் பொறுப்புகளுக்கு இட ஒதுக்கீடு முறையை செயல்படுத்த வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் கோரிக்கை வைத்திருக்கிறார்.
சென்னை உட்பட மூன்று நகராட்சிகளை தனித்தொகுதிகளாக மற்றும் பெண்களுக்கு தனியாக 11 மாநகராட்சிகளை ஒதுக்கிய தமிழ்நாடு அரசுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் நன்றி கூறியிருக்கிறார். மேலும், உள்ளாட்சி அமைப்புகளுக்கான துணைத் தலைவர் பொறுப்புகளுக்கு இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கோரியுள்ளார்.
இதுபற்றி அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், சென்னை ஆவடி மற்றும் தாம்பரம் போன்ற மாநகராட்சிகளை தனி தொகுதிகளாக மற்றும் பெண்களுக்கென்று தனி தொகுதியாக சென்னை உள்பட 11 மாநகராட்சிகளை தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கிறது. இதற்காக தமிழ்நாடு அரசு மற்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக என் பாராட்டுக்கள் மற்றும் நன்றிகளை கூறிக் கொள்கிறேன் என்று கூறியிருக்கிறார்.