சர்வாதிகார முறையில் கருத்து தெரிவிக்கிறார்கள் என்று திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பாஜகவின் மத்திய அரசு இந்தியை மற்ற இந்தி அல்லாத மாநிலங்களில் திணிக்க முயற்சி செய்து வருகின்றது என குற்றச்சாட்டு எழுந்து வரும் நிலையில் அமித்ஷா ட்விட் செய்திருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதாவது இந்தியாவில் இந்தி தினம் கொண்டாடப்படுகிறது . இந்தி தினத்தையொட்டி ‘ஒரே நாடு ஒரே மொழி’ என்ற அடிப்படையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா ட்விட்டரில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதில், இந்தியா வெவ்வேறு மொழிகளைக் கொண்ட நாடு. ஒவ்வொரு மொழிக்கும் அதன் சொந்த முக்கியத்துவம் உண்டு. ஆனால் முழு நாட்டிற்கும் ஒரு மொழி இருப்பது மிகவும் முக்கியம். இது உலகில் இந்தியாவின் அடையாளமாக மாற வேண்டும். இன்றைய தேதிக்கு இந்தியாவை ஒருங்கிணைக்க வேண்டுமென்றால், அது அதிகம் பேசப்படும் இந்தி மொழியால் மட்டுமே முடியும் என்று பதிவிட்டுள்ளார்.
இதற்கு மு.க ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்தார். பலரும் இந்த கருத்துக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் அமித்ஷாவின் பேச்சு குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, எதையும் நடைமுறைப்படுத்தும் பெரும்பான்மை இருப்பதால் சர்வாதிகார முறையில் கருத்து தெரிவிக்கிறார்கள் என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.