டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடுகள் குறித்து விசாரிக்க விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 9,000-த்திற்கும் அதிகமான காலிப்பணியிடங்கள் நிரப்ப குரூப் 4 தேர்வு நடத்தப்பட்டது. இதனை 14 லட்சம் பேர் எழுதினார்கள். இதில் 99 பேர் மட்டும் முறைகேட்டில் ஈடுபட்டததாக தகவல் வெளியானது. அவர்கள் அனைவரும் அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டனர். இது தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.முறைகேடு தொடர்பாக 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் பலரிடம் சிபிசிஐடி அதிகாரிகள் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த முறைகேட்டில் அடுத்தது அதிகாரிகள் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே நேற்று மு.க ஸ்டாலின் சிபிசிஐடி விசாரணை நடத்த உத்தரவிடவேண்டும் வேண்டும் என அறிக்கை வெளியிட்டார். அதை தொடர்ந்து தற்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், சி.பி.ஐ விசாரணையில் தான் முழுமையான தகவல்கள் வெளியாகும் என்பதால் டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு முறைகேடுகள் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உடனே உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்தார்.
இந்த நிலையில் டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேடுகள் குறித்து விசாரிக்க தனி விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேடு தொடர்பாக அடுத்தடுத்து வரும் தகவல்கள் அதிர்ச்சியளிப்பதாகவும் தெரிவித்தார்.