RSSயை எதிர்க்கும் வகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மனுஸ்மிருதி அச்சிட்டு, பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படுவது குறித்து, செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, திருமாவளவனுக்கு வேலை இல்லை என்று பார்க்கின்றேன். மனுஸ்மிருதி அப்படிங்கறது எதோ ஒரு காலகட்டத்தில், எங்கேயோ எழுதினாங்க. அதில் பாதி பொய்யை திரித்து இருக்கின்றார்கள்.அவுங்க அவுங்க எழுதி இருக்காங்க.
எப்போதும் மனுஸ்மிருதியில் உள்ள கருத்துக்களை பாரதிய ஜனதா கட்சி ஏற்றுக் கொள்ளாது என்று சொன்ன பிறகு, அந்தந்த காலகட்டத்தில் சில அரசியல் அமைப்பிற்கு தகுந்தாற்போல் ஒரு கருத்து. அதுவும் மனுஸ்மிருதி நாம் பேசக்கூடிய விஷயங்கள் எல்லாமே மொழி பெயர்ப்பு தான். எந்த மனுஸ்மிருதியை யார் மொழிபெயர்த்தார். ஒரிஜினல் மனுஸ்மிருதி என்ன ?
யாரோ ஒரு ஆங்கில பாதிரியார், மதமாற்றத்திற்காக மொழிபெயர்த்த பூக்கை… இவங்களாகவே செலக்ட் பண்ணி, இவங்களா தப்பான கருத்துக்களை நுழைச்சு, இவங்களாகவே மொழிபெயர்த்து, மொழிபெயர்த்த இங்கிலீஷ்ல இருந்து, திரும்பவும் தமிழ்ல மொழிபெயர்த்து, அண்ணன் திருமாவளவன் அவர்கள் கொடுக்குறாங்க. அவருக்கு வேலை இல்லை என்று தான் நான் சொல்லுவேன் என தெரிவித்தார்.