திருமாவளவன் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற தொகுதியில் மக்கள் நல கூட்டணி சார்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் போட்டியிட்டார். இந்த தொகுதியில் அதிமுக வேட்பாளர் முருகுமாறன் 48,450 வாக்கு பெற்றநிலையில் திருமாவளவன் 48,363 வாக்குகள் பெற்றிருந்தார். 88 வாக்கு வித்தியாசத்தில் முருகுமாறன் வெற்றி பெற்றார்.
இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் திருமாவளவன் மனு தாக்கல் செய்தார். அதில் காட்டுமன்னார் கோவில் சட்டமன்ற தொகுதியில் நிராகரிக்கப்பட்ட 102 தபால் வாக்குகளை ஆய்வு செய்ய வேண்டும் என்று தெரிவித்திருந்த நிலையில் திருமாவளவன் கோரிக்கையை நிராகரித்து மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் முருகுமாறன் வெற்றி செல்லும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டதால் ஆளும் அதிமுக மகிழ்ச்சி அடைந்துள்ளது.