Categories
அரசியல் மாநில செய்திகள்

தொடரும் கோல போராட்டம்… அழகான கோலம் போட்டு எதிர்ப்பை காட்டிய திருமா!

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தனது வீட்டின் வாசல் முன்பு கோலம் போட்டார்.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்ட 20 பேர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இந்தச் சட்டத்தால் மத்திய அரசுக்கு எதிர்ப்பலை நாடு முழுவதும் உருவாகியுள்ளது. பல்வேறு பகுதிகளிலும் மக்கள் வித்தியாசமான முறையில் தங்களது எதிர்ப்பை தெரிவித்துவருகின்றனர்.

Image

அந்த வகையில், நேற்று முன்தினம் சென்னை பெசன்ட் நகரில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து கோலம் போட்ட பெண்களை காவல் துறையினர் கைதுசெய்தனர். இதற்கு பல்வேறு அமைப்புகளும் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. திமுக எம்பி கனிமொழி சென்னை, தூத்துக்குடியிலுள்ள தனது வீடுகளுக்கு வெளியே குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை எதிர்த்து கோலம் போட்டிருந்தார்.

Image

இதைத் தொடர்ந்து முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி வீட்டிலும், ஸ்டாலின் வீட்டிலும் கோலம் போட்டு திமுக தனது எதிர்ப்பை பதிவு செய்தது. இந்த விவகாரம் தமிழ்நாடு முழுவதும் பரவி பெரும்பாலான இடங்களில் மக்கள் வீட்டுவாசல் முன்பு கோலம் போட்டனர்.

Image

இந்நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், வேளச்சேரியிலுள்ள தனது வீட்டின் வாசல் முன்பு கோலம் போட்டு குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கெதிராக எதிர்ப்பை தெரிவித்துள்ளார். மக்களவை உறுப்பினரான திருமாவளவன் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக மக்களவையிலும் தனது கண்டனத்தை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |