விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப் பெறும்வரை போராட்டம் நடத்தப் போவதாக ஜனநாயகப் வழக்கறிஞர் சங்க மாநில செயலாளர் திரு பாரதி தெரிவித்துள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல் திருமாவளவன் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை திரும்பப்பெற வலியுறுத்தி ஜனநாயக வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றம் நுழைவாயில் முன்பாக போராட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஜனநாயக வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு பாரதி மருத்துவப் படிப்பில் இந்த ஆண்டே ஓபிசி மாணவர்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.