Categories
சென்னை மாவட்ட செய்திகள்

திருமாவளவன் வீன் விளம்பரத்தை தேடுகிறார் இல.கணேசன்…!!

மனுஸ்மிருதியில் இல்லாததை ஒன்றை இருப்பதாகக் கூறிய திரு திருமாவளவன் வீண் விளம்பரம் தேடுவதாக பாஜக மூத்த தலைவர் திரு இலகணேசன் விமர்சித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் இடம் பேசிய திரு இலகணேசன் மனுஸ்மிருதி குறித்து திரு திருமாவளவன் அநாகரீகமாக பேசியதாகவும் அரசியல் தலைவராக இருப்பவர் நாகரீகத்தோடு பேச வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். மருத்துவ உள் இட ஒதுக்கீடு குறித்து ஆளுநர் முடிவு எடுத்திருக்க வேண்டும். ஆனால் ஏதோ ஒரு காரணத்தினால் முடிவெடுக்காமல் இருக்கிறார்கள் என திரு இல கணேசன் தெரிவித்துள்ளார்.

மனுஸ்மிருதி குறித்து திரு திருமாவளவன் விளம்பரத்திற்காக பேசி வருவதாக நடிகையும் பாஜக கலை மற்றும் கலாச்சார பிரிவின் தலைவர் காயத்ரி ரகுராம் விமர்சித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ஆதாரம் இல்லாமல் பெண்கள் குறித்து திரு திருமாவளவன் தரக்குறைவாக பேசியதாக குற்றம்சாட்டி உள்ளார்.

Categories

Tech |