Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

திரும்ப முடியாமல் நின்ற லாரி… குறுகிய கொண்டை ஊசி வளைவுகள்…. போக்குவரத்து பாதிப்பு….!!

திரும்ப முடியாமல் நின்ற லாரியால் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் திம்பம் மலைப்பாதையில் 20-க்கும் மேற்பட்ட கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. மேலும் இந்த மலைப்பாதை வழியாக தமிழகம்-கர்நாடகா இடையே ஏராளமான கார், வேன் உள்ளிட்டவைகள் சென்று வருகின்றன. இந்நிலையில் கோவையில் இருந்து பெங்களூருக்கு கண்டெய்னர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த லாரியானது ஊசி வளைவு பாதையில் திரும்ப முடியாமல் நின்றது.

இதனால் அந்த பாதை வழியாக சிறிய வாகனங்கள் மட்டுமே சென்றுள்ளன. அதன்பின் அந்த வழியாக வந்த மற்றொரு லாரி ஓட்டுனர் திருப்ப முடியாமல் நின்ற லாரியை மீட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து போக்குவரத்து சீரானதால் அனைத்து வாகனங்களும் சென்றுள்ளன. இதனால் அந்த பகுதியில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |