கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோமான் நடுத்தெரு பகுதியில் கஞ்சா விற்பனை செய்கிறார்கள் என்று காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்ற போது அங்கு வாலிபர் ஒருவர் கஞ்சாவை விற்பனை செய்து கொண்டிருந்தார். அப்போது அந்த வாலிபர் அவர்களை பார்த்ததும் அங்கிருந்து தப்பிக்க முயற்சி செய்ததை அறிந்த காவல்துறையினர் அவரை மடக்கிப் பிடித்து விட்டனர்.
இதனையடுத்து காவல்துறையினர் வாலிபரிடம் நடத்திய விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் முகைதீன் சாஹிப் என்பது தெரியவந்துள்ளது. அதன்பிறகு காவல்துறையினர் அவர் விற்பனைக்காக வைத்திருந்த 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் தடையை மீறி கஞ்சா விற்ற குற்றத்திற்காக முகைதீன் சாஹிப்பை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.