திருப்பூர் அருகேயுள்ள திருமூர்த்தி அணையின் கிழக்கு பகுதியில் தொடர்ந்து வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகேயுள்ள திருமூர்த்தி அணையில் கடந்த ஆண்டு 60 கன மீட்டர் அளவுக்கு வண்டல் மண் அள்ள அரசு அனுமதி அளித்தது. விவசாயிகள் லாரிகள் மூலம் வண்டல் மண் அள்ளி தங்கள் தோட்டங்களுக்கு கொண்டு சென்றனர். இந்நிலையில் இன்னும் 12 கனமீட்டர் மீதம் இருந்த நிலையில் தற்போது வண்டல் மண் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டது.
அதன்படி பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் முன்னிலையில் வண்டல் மண் அள்ளும் பணி துவங்கியுள்ளது. திருமூர்த்தி அணையில் கிழக்கு பகுதி தற்போது மெட்டு பகுதியாக உள்ளதால் தொடர்ந்து வண்டல் மண் எடுக்க பொதுப்பணித்துறையினர் அனுமதிக்க வேண்டும் என விவசாயிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.