வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் திருநங்கைகள், உதவி செய்யுமாறு கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளனர்.
தென்காசி மாவட்டத்தில் திருநங்கைகள் நலச்சங்கம் ஒன்று அமைந்துள்ளது. இந்த சங்கத்தின் தலைவியான ரம்யா என்பவர் தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று கோரிக்கை மனுவினை கொடுத்துள்ளார். அந்த மனுவில், கொரோனா தொற்று காரணமாக சில வாரங்களாக தமிழக அரசு முழு ஊரடங்கு அமல் படுத்தியது. இதனால் எந்த விழாக்களும் நடைபெறாத நிலையில் எங்களின் வாழ்வாதாரம் முழுவதுமாக முடங்கியுள்ளது. இதனை அடுத்து எங்களுக்கு சமூக நலத்துறை மூலம் வழங்கப்படும் அடையாள அட்டை கிடைக்காததால் அரசு அளித்த உதவித்தொகையும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் திருநங்கைகளான எங்களின் நலன் மேம்படவும், எங்களின் சமூக உரிமைகளை பெற வேண்டும் எனவும் தென்காசி மாவட்ட திருநங்கைகள் நலச்சங்கம் ஒன்றை ஆரம்பித்து அரசு வழிகாட்டுதலின்படி பல்வேறு பணிகளை பூர்த்தி செய்து கலைத் துறையை வளர்த்து வருகிறோம். அதன்பின் சுமார் 100 திருநங்கைகளுக்கும் மேல் குடும்பத்துடனும், தனியாகவும் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நாங்கள் உண்ண உணவும், தங்குவதற்கு இடமும் இன்றி தவிக்கிறோம் எனவே எங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக உரிய நடவடிக்கை எடுக்குமாறு அந்த மனுவில் திருநங்கைகள் குறிப்பிட்டுள்ளனர்.