Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பெற்றோருக்கு அடிக்கடி தொந்தரவு… திருநங்கை எடுத்த விபரீத முடிவு… சென்னையில் நடந்த சோகம்…!!

குடிபோதையில் திருநங்கை தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்திலுள்ள கல்யாணபுரம் பகுதியில் நாகப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு சூர்யா என்ற மகன் இருந்தான். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இந்த சூர்யா திருநங்கையாக மாறி லாரா என்று தன் பெயரை மாற்றிக் கொண்டு வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான லாரா தனது பெற்றோரிடம் அடிக்கடி மது குடிக்க பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார்.

இதனையடுத்து குடிபோதையில் தனது வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை எடுத்து உடல் முழுவதும் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அப்போது லாராவின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த வியாசர்பாடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |