Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

கொரோனா ஒழியவும்…. நாடு பழைய நிலைக்கு திரும்பவும்…. திருநங்கைகளின் சிறப்பு வழிபாடு….!!

வேலூரில் கொரோனா அடியோடு போக வேண்டும் என்பதற்காக திருநங்கைகள் தாலி கட்டி சிறப்பு வழிபாடு செய்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகில் கூத்தாண்டவர் கோவில் திருவிழா வருடந்தோறும் நடைபெற்று வரும். ஆனால் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இந்த வருடம் நடைபெற இருந்த கூத்தாண்டவர் கோவில் திருவிழா தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் வேலூர் மாவட்ட திருநங்கைகள் சார்பாக வேலூரில் பழையடவுன் பஜனைகோவிலில் வைத்து கூத்தாண்டவர் கோவில் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட திருநங்கைகள் இந்த வழிபாட்டில் கலந்துகொண்டும், கும்மியடித்தும் சுவாமி தரிசனம் பெற்றுக்கொண்டனர்.

இதனையடுத்து திருநங்கைகளின் தலைவியாக இருக்கின்ற கங்காநாயகத்  தலைமையில் சிறப்பு வழிபாடு செய்து, திருநங்கைகள் தாலிக்கட்டி கொண்டு சந்தோஷமாக ஆடிபாடி இருந்திருக்கின்றனர். இதன்பிறகு பாரதிநகர் சுடுகாட்டில் தாலியறுப்பு நிகழ்ச்சி  நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின்போது தாலி கட்டிக்கொண்ட திருநங்கைகள் எல்லோரும் அவர்களது தாலியை அறுத்து அழுது கொண்டிருந்தனர். இதுகுறித்து திருநங்கைகள் கூறுகையில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பரவலினால் கூத்தாண்டவர் கோவில் திருவிழா நடைபெறவில்லை. அதனால் இந்த வருடம் கொரோனா அடியோடு ஒழிந்து தமிழ்நாடு மீண்டும் இயல்பு நிலைக்கு வரவேண்டும் என்பதற்காக  இந்த வழிபாடு செய்யப்பட்டுள்ளது என்று கூறியுள்ளனர்.

Categories

Tech |