விசாரிக்க சென்ற இடத்தில் திருநங்கையிடம் தவறாக நடந்து கொண்ட ஏட்டு மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கோவையில் விசாரணை என்று கூறி திருநங்கையிடம் ஏட்டு ஒருவர் அத்துமீறயுள்ளார். இது குறித்து கோவையில் உள்ள அம்மன் குளத்தைச் சேர்ந்த திருநங்கை ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனை அடுத்து அவர் போலீஸில் அளிக்கப்பட்ட மனுவில் கூறப்பட்டதாவது ” சில நாட்களுக்கு முன்பாக ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்துக்கு அருகில் எனது கைபேசி திருட்டு போனது.
இதனால் ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். இதனை அடுத்து காவல் நிலையத்தில் ஏட்டாக பணிபுரியும் மூவேந்தர் வேல்பாரி என்பவர் எனது வீட்டிற்கு விசாரணைக்காக வந்தார். ஆனால் அவர் என்னிடம் ஆபாசமாக பேசியதுடன் மட்டுமின்றி பாலியல் தொல்லையும் கொடுத்தார்.
இதனால் அதிர்ச்சியடைந்த நான் கூச்சலிட்டேன். உடனே அவர் அங்கிருந்து தப்பித்து சென்றுவிட்டார். குறிப்பாக அவர் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இவர் அளித்திருந்த புகாரின் பெயரில் ரேஸ்கோர்ஸ் காவல்நிலைய போலீசார் ஏட்டு மீது ஆபாசமாக பேசுதல், தவறாக நடந்து கொள்ளுதல், திருநங்கைகள் பாதுகாப்பு சட்டம் 2019 போன்ற பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.