மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்து வந்த கனமழையால் குமரி குற்றாலம் என்று அழைக்கப்படும் திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வந்த மழையால் 48 அடி அளவு கொண்டுள்ள பேச்சிப்பாறை அணை முழு கொள்ளளவை எட்டி இருப்பதால் அணைகளில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் கோதையாறு, பறளியாறு உள்ளிட்ட குறித்த முக்கிய அணைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. முக்கிய சுற்றுலா மையமான திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை செய்யப்பட்டுள்ளது.
தடையையும் மீறி அருவியில் ஆர்ப்பரிக்கும் தண்ணீரை பார்க்க ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து ரசித்து செல்கின்றனர். அருவியில் உள்ள பாறைகள் மீது ஏறி பாதுகாப்பற்ற முறைகளில் சுற்றுலா பயணிகள் குளித்து வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.