திருப்பதி கோயிலில் தற்காலிகமாக பல்வேறு சேவைகளை தேவஸ்தானம் நிறுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் திருப்பதியில் குறைந்து வரும் நிலையில் தினசரி முன்பதிவு மற்றும் நேரடியாகவும் டிக்கெட் வழங்கப்பட்டு தினமும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதனைத் தொடர்ந்து தேவஸ்தனம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதாவது ஆந்திராவில் தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதாள் மீண்டும் அனைத்து பூஜைகளுக்கும் பக்தர்களை அனுமதிக்கவும், அன்னப் பிரசாதம் வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுமட்டுமின்றி மாதம்தோறும் இணையத்தளம் வாயிலாக தினசரி ரூபாய் 300 டிக்கெட் வழங்கப்பட்டு தற்போது தினமும் 50 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் பெற்று வருகின்றனர். இதற்கிடையில் கோடை விடுமுறையையொட்டி அதிக அளவில் பக்தர்கள் தரிசனத்திற்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தேவஸ்தானம் எடுத்து வருகிறது.
இந்த நிலையில் திருப்பதி தேவஸ்தானம் தற்காலிகமாக வாராந்திர சேவைகளை ரத்து செய்ய முடிவெடுத்துள்ளது. இதற்கிடையில் முன்னதாகவே வசந்த உற்சவம், விசேஷ பூஜை, ஆர்ஜித சேவைகள், சகஸ்கர கலசாபிஷேகம் போன்றவற்றை நிறுத்தப்பட்டுள்ள நிலையில் திருப்பாவாடை, அஷ்டதள பாத பத்மாதாரணை மற்றும் நிஜபாத தரிசன ஆர்ஜித சேவைகளை தற்காலிகமாக விரைவில் நிறுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து நேற்று 76,324 பக்தர்கள் தரிசனம் செய்த நிலையில் 38,710 பேர் முடி காணிக்கை செலுத்தி, உண்டியலில் ரூபாய் 4.24 கோடி காணிக்கை வசூலாகியுள்ளது.