திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜனவரி மாதத்துக்கான இலவச தரிசன டிக்கெட்டுகள் இன்று ஆன்லைனில் வெளியீடு இல்லை என்று தேவஸ்தானம் அறிவித்து உள்ளது.
கடந்த 2 மாதங்களாக கொரோனா தொற்றை கருத்தில் கொண்டு இலவச தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் வழங்கி வந்தது. இந்நிலையில் இன்று ஆன்லைனில் வெளியிட வேண்டிய இலவச தரிசன டிக்கெட்டுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கொரோனா மற்றும் ஒமிக்ரான் போன்ற தொற்றுக்கள் மருத்துவமனையில் அதிகரித்து வருகிறது.
இதனால் இலவச தரிசன டிக்கெட்டுகளை நேரடியாக வழங்குவதா அல்லது ஆன்லைனில் வழங்குவதா என்பது தொடர்பாக தேவஸ்தானம் ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. வரும் 13-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை வைகுண்ட வாசல் திறக்க இருப்பதால் பக்தர்கள் கூட்டம் அதிகம் வருவதை கருத்தில் கொண்டு இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்குவது தொடர்பாக தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.