உலக புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினசரி லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகின்றனர். இப்போது வைகுண்ட ஏகாதசி துவங்கி இருப்பதால், வைகுண்ட நுழைவு வாயில் திறக்கப்பட்டு 10 நாட்களுக்கு தொடர்ந்து பக்தர்கள் அனுமதிக்கப்பட இருக்கின்றனர். இந்த நிலையில் சீனாவில் புது வகை கொரோனா பரவல் உலகளவில் அதிகரித்து வருவதால் இந்தியாவில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
அந்த வகையில் திருமலை தேவஸ்தானம் கொரோனா கட்டுப்பாடுகளை மீண்டும் நடைமுறைபடுத்த தொடங்கியுள்ளது. அதனடிப்படையில் வருகிற ஜனவரி 1-11 ஆம் தேதி வரை சிறப்பு தரிசனம் செய்ய முன்பதிவு செய்பவர்களுக்கு கொரோனா தடுப்பூசி சான்றிதழ் அவசியமென தேவஸ்தானம் அறிவித்து உள்ளது. அதேபோன்று ரூபாய்.300 டிக்கெட் பெறக்கூடிய பக்தர்களும் கொரோனா தடுப்பூசி சான்றிதழ் கொடுப்பது அவசியமாகும். மேலும் 2 தவணை தடுப்பூசி செலுத்தாதவர்கள் கொரோனா இல்லை என்ற சான்றிதழை தரிசனத்துக்கு வரும் போது கொடுக்கவேண்டும் என தெரிவித்து இருக்கிறது..