திருப்பதி தேவஸ்தான நிர்வாகமானது ஏழுமலையான் கோயில்களை அமைத்து நிர்வகித்து வருகிறது. இந்த கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. காணொலி மூலமாக நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்திற்கு தேவஸ்தான அதிகாரி வீரப்பிரம்மம் தலைமை தாங்கினார்.
வருகிற ஜனவரி 2-ஆம் தேதி வைகுண்ட ஏகாதசி அன்று கோயில்களில் செய்யப்பட வேண்டிய முன்னேற்பாடுகள், வழிபாடு முறைகள், பக்தர்களுக்கு செய்ய வேண்டிய வசதி போன்றவை பற்றி ஆலோசனை நடைபெற்றது. அதன்படி வரிசையாக பக்தர்கள் செல்ல போதிய ஏற்பாடு செய்ய வேண்டும். அத்துடன் சாதாரண பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்ய வரிசையில் சென்று கொண்டிருக்கும்போது வி.ஐ.பி.கள் யாராவது வந்தால் சாதாரண பக்தர்களை தடுத்து நிறுத்தக்கூடாது. மேலும் அவர்களை எந்த தொந்தரவும் செய்யக்கூடாது என உத்தரவு பிறப்பிப்பட்டது.