ஆந்திரா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற திருப்பதி கோயில் உள்ளது. ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக பல்வேறு மாநிலங்கள், பல்வேறு நாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் செல்வார்கள். ஏழுமலையானை தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்யும் வகையில் தேவஸ்தானம் மூலம் மாதந்தோறும் ரூ.300 ஆன்லைன் தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அதன்படி தற்போது திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் டிசம்பர் மாதம் சாமி தரிசனம் செய்ய வரும் பக்கதர்களுக்கு ரூ.300 டிக்கெட் இன்று காலை 10 மணி முதல் திருமலை-திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள்ளது. எனவே மக்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து குறிப்பிட்ட நாளில் திருமலைக்கு வந்து ஏழுமலையானை தரிசனம் செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.