Categories
தேசிய செய்திகள்

திருப்பதி சிறப்பு தரிசனம்…. வெறும் 40 நிமிடங்களில் விற்று தீர்ந்த டிக்கெட்… வருத்தத்தில் பக்தர்கள்….!!!

ஆந்திரா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற திருப்பதி கோயில் உள்ளது‌. ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக பல்வேறு மாநிலங்கள், பல்வேறு நாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் செய்வார்கள். ஏழுமலையானை தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்யும் வகையில் தேவஸ்தானம் மூலம் மாதந்தோறும் ரூ.300 ஆன்லைன் தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி டிசம்பர் மாதத்திற்கான ரூஹ300 டிக்கெட் முன்பதிவிற்கு நேற்று அறிவிப்பு வெளியானது.

இதனைய டுத்து 10 மணிக்கு தயாராக இருந்த பக்தர்கள் ரூ.300 சிறப்பு தரிசனத்தை விரைந்து முன்பதிவு செய்தனர். இதனால் 40 நிமிடங்களில் டிசம்பர் மாதத்தில் உள்ள 31 நாட்களுக்கு அனைத்து சிறப்பு தரிசன டிக்கெட் காலியாகிவிட்டது. மேலும் பல பக்தர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். தொடக்கம் முதலில் முன்பதிவு செய்ய தொடங்கினாலும் அனைவரும் ஒரே சமயத்தில் முன்பதிவு செய்தால் சர்வர் பிரச்சினையால் பலருக்கு டிக்கெட் கிடைக்கவில்லை என்று பக்தர்கள் மன வருத்தத்துடன் தெரிவித்தனர்.

Categories

Tech |