Categories
ஆன்மிகம் கோவில்கள் வழிபாட்டு முறை விழாக்கள்

திருப்பதியில் இன்று முதல் இலவச தரிசன டோக்கன் வழங்கப்படுகிறது…!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இரண்டு மாதங்களுக்குப் பிறகு இலவச தரிசனத்திற்கான டோக்கன் வழங்கப்பட்டு நாளை முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்து உள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக இலவச தரிசனம் ரத்து செய்யப்பட்டது. ஆன்லைன் மூலம் 300 ரூபாய் கட்டணம் செலுத்தியவர்கள் மட்டுமே தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில் நாளை முதல் நாள் தோறும் இலவச தரிசன டோக்கன் பெற 3000 தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

அதன்படி இன்று காலை முதல் இலவச தரிசனத்திற்காக டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. டோக்கன் பெற்ற உள்ளூர் பக்தர்கள் மட்டும் இன்று தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

Categories

Tech |