Categories
மாநில செய்திகள்

திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு ஷாக் நியூஸ்…. இனி இது கட்டாயம்….. அதிரடி அறிவிப்பு….!!!!

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருகின்றது. இதனை தடுப்பதற்காக அனைத்து மாநில அரசுகளும் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. உதாரணத்திற்கு தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு, வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிறுகளில் வழிபாட்டுத் தலங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் திருப்பதி ஏழுமலையான் கோவிலிலும் பக்தர்களுக்கு சில கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கொரோனா தொற்று இல்லை என்ற “நெகட்டிவ்” சான்றிதழ் இல்லாமல் வருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்களை திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு துறை ஊழியர்கள் சோதனைச் சாவடியில் கண்டறிந்து திருப்பி அனுப்பி வைக்கின்றனர்.

இதனால் சுவாமி தரிசனம் செய்ய வரும் ஏராளமான பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர். இந்த இரண்டு சான்றிதழ்களை கொண்டு வரும் பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். இல்லையேல் திருப்பி அனுப்பப்படுவார்கள் என்று தேவஸ்தானம் சார்பில் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |