Categories
திருப்பூர் மாநில செய்திகள்

ஒன்று கூடி வீடியோ பதிவு….. கேள்விக்குறியான சமூகஇடைவெளி…… மக்கள் மீது போலீஸ் வழக்கு பதிவு….!!

திருப்பூரில் சமூக இடைவெளியை கேள்விக்குறியாக்கும் விதமாக ஒன்றுகூடிய மக்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை மட்டுமே வாங்க வீட்டை விட்டு வெளியே வர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் வெளியே வரும் சமயங்களிலும் முக கவசம் அணிய வேண்டும் என்றும், சமூக இடைவெளியை மக்கள் கடைபிடிக்க வேண்டும் என்ற அறிவுரையும் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அவினாசி அருகில் உள்ள வடுகபாளையம் என்னும் பகுதியில் பொது மக்கள் நிவாரண பொருட்கள் வழங்க கோரி சமூக இடைவெளியை பின்பற்றாமல் கிராமத்தின் மையப்பகுதியில் ஒன்றுகூடி அதை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு உள்ளனர். இதை பார்த்த கிராம நிர்வாக அலுவலர்கள் சேவூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், சமூக இடைவெளியை கடைபிடிக்காமல், கொரோனா பரவ காரணமாக இருந்த கிராம மக்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Categories

Tech |