ராணுவ அதிகாரி வீட்டில் திருட முயன்ற வடமாநில இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ஈரோடு மாவட்டத்திலுள்ள குமணன் என்பவர் வசித்து வருகின்றார். இவர் ராணுவ துறையில் அதிகாரியாக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இந்நிலையில் இவர் வீட்டை பூட்டி விட்டு தனது மனைவியுடன் வெளியே சென்றுள்ளார். அதன் பின் வீடு திரும்பிய குமணன் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனையடுத்து உள்ளே சென்ற அவர் வீட்டிலுள்ள பொருட்கள் சிதறிக் கிடந்ததை பார்த்துள்ளார்.
அதன்பின் வீட்டின் சமையலறையிலிருந்து ஏதோ சத்தம் கேட்டுள்ளது. அதனை கேட்டு அங்கு குமணன் சென்று பார்த்தபோது பதுங்கியிருந்த திருடனை கையும் களவுமாக பிடித்துள்ளார். இதனையடுத்து பிடிப்பட்ட திருடனை குமணன் பெருந்துறை காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். மேலும் காவல் துறையினர் நடத்திய விசாரணையில் பிடிபட்ட திருடன் வடமாநிலத்தை சேர்ந்த சந்தோஷ்குமார் என்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.